சனி, 28 மே, 2011

நோக்கியாவை வாங்குகிறது மைக்ரோசாப்ட்?

மொபைல் உலகின் முன்னணி நிறுவனமான நோக்கியாவை வாங்குகிறது மைக்ரோசாப்ட் என தகவல்கள் வெளியாகியுள்ளதால் கார்ப்பரேட் உலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Microsoft and Nokia

நோக்கியாவின் ஹேண்ட்செட் யூனிட்டை வாங்கும் பேச்சுக்களில் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக, மொபைல் ரிவியூ பத்திரிகை ஆசிரியர் தனது ப்ளாகில் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் இறுதிக்குள் இதுகுறித்த டீல் எட்டப்படும் எனத் தெரிகிறது. மார்க்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் ஆப்பிள் ஐபோனுடன் போட்டி போட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது விண்டோஸ் மொபைல். அதற்கு நோக்கியாவை வாங்குவது உதவும் என நம்புகிறது.

மேலும் மொபைல் ஹேண்ட்செட் வடிவமைப்பில் இன்னும் அழகிய வடிவமைப்பைக் கொடுக்கவும் இந்த முயற்சியில் இறங்கியுள்ளது மைக்ரோசாப்ட்.

நோக்கியாவும் மைக்ரோசாப்டும் தொழில்நுட்ப ரீதியில் இணைந்து செயல்படப் போவதை முன்கூட்டியே கணித்துச் சொன்னது இந்த மொபைல் ரிவ்யூ பத்திரிகைதான் என்பதால், இப்போது அவர்கள் வெளியிட்டுள்ள இந்த புதிய செய்திக்கும் முக்கியத்துவம் கிடைத்துள்ளது.

1 கருத்து:

  1. நோக்கியாவும் மைக்ரோசாப்டும் தொழில்நுட்ப ரீதியில் இணைந்து செயல்படப் போவதை முன்கூட்டியே கணித்துச் சொன்னது இந்த மொபைல் ரிவ்யூ பத்திரிகைதான் என்பதால், இப்போது அவர்கள் வெளியிட்டுள்ள இந்த புதிய செய்திக்கும் முக்கியத்துவம் கிடைத்துள்ளது.

    good news!

    பதிலளிநீக்கு