வியாழன், 26 மே, 2011

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 ஷார்ட்கட் கீகள்

ஷார்ட்கட் கீகள் நம் கம்ப்யூட்டர் பயன்பாட்டினை விரைவு படுத்துவது மட்டுமின்றி, நம் திறமையை நாமே மெச்சிக் கொள்ள ஒரு சந்தர்ப்பத்தினைத் தருகின்றன. இங்கே அண்மையில் வெளி வந்து, பலரும் பயன்படுத்தும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9க்கான ஷார்ட்கட் கீ தொகுப்புகள் தரப்படுகின்றன.
Ctrl+Shift+P – மற்றவர்கள் அறிந்து கொள்ள முடியாமல், இன்டர்நெட் முகவரிகளைப் பதியாமல், இன்டர்நெட் உலாவிற்கு வழி தரும் இன் பிரைவேட் பிரவுசிங் மேற்கொள்ள.
Ctrl+B – Favorites dialog box டயலாக் பாக்ஸினைத் திறக்க.
Ctrl+H பேவரிட்ஸ் சென்டரைத் திறந்து, ஹிஸ்டரி பட்டியலைப் பார்க்க
Ctrl+J– பேவரிட்ஸ் சென்டர் திறந்து நீங்கள் அளித்துள்ளவற்றைக் காண
Ctrl+Shift+Del– பிரவுசிங் ஹிஸ்டரி மொத்தமாக நீக்க.
Alt இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9ன் மெனு பாரைக் காட்டும்.
Alt + X டூல்ஸ் திறக்கப்படும்.
Alt + M நம் ஹோம் பேஜ் செல்ல இந்தக் கீகளை அழுத்தவும்.
Alt + C பிரவுசிங் ஹிஸ்டரியை நிர்வகிக்க
Alt + Home – ஹோம் மெனு திறக்க
Alt+Z பேவரிட்ஸ் மெனுவில் இணைக்க (Add to) மெனு திறக்க
Alt+ A –பேவரிட்ஸ் மெனு திறக்க
Alt+ I – feed viewல் அனைத்தையும் காட்ட
Alt+ M – feed viewல் ஒன்றைப் படித்ததாய்க் காட்ட
Alt+ S – feed viewல் சர்ச் பாக்ஸில் கர்சரை அமைக்க
Alt+ C – பேவரிட்ஸ் சென்டர் திறந்து உங்களுடைய பேவரிட் தள இணைப்புகளைக் காட்டும்.
Alt+R – பிரிண்ட் மெனு திறக்கப்படும்.
Alt+J – ஆர்.எஸ்.எஸ். (RSS) மெனு திறக்கப்படும்.
Alt+O டூல்ஸ் மெனு திறக்க
Alt+S – மெனு திறக்க.
Alt + H – ஹெல்ப் மெனு திறக்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக