மொபைல் சந்தையில், சுற்றி வந்தால், ஒவ்வொரு நிலையிலும், எந்த வகை மொபைல் போனை மக்கள் அதிகம் விரும்புகிறார்கள் என்று தெரியவரும். இந்த நிலைகளில் அதிகம் விற்பனை யாகும் போன்களையும் கண்டறியலாம். மார்ச் நான்காம் வாரத்தில், வெளியான தகவல்களின்படி கீழ்க்காணும் மொபைல் கள் மக்கள் மனதைக் கவர்ந்தவையாக, அதிக அளவில் விற்பனையாயின.
வேறு நிறுவனப் போன்களும், வேறு சில நகரங்களில் விற்பனையாகி யிருக்கலாம்.
1. எல்.ஜி. ஏ 165: இது ஒரு பார் டைப் போன். எடை 81 கிராம். 110 x 47.5 x 14.1 மிமீ என்ற அளவில் வடிவமைக்கப்பட்டது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 15 மணி நேரம் வரை பேசும் திறனை அளிக்கிறது. நான்கு அலைவரிசைகளில் இயங்குகிறது. 5.1 செமீ அளவில் திரை உள்ளது. 0.3 மெகா பிக்ஸெல் திறனுடன், 4 எக்ஸ் டிஜிட்டல் ஸூம் கொண்ட விஜிஏ கேமரா கிடைக்கிறது. இதன் மெமரி 3.9 எம்.பி. மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 2 ஜிபி வரை நினைவகத்திறனை அதிகப்படுத்தலாம். இரண்டு சிம்களை இயக்கலாம். எம்பி3 பிளேயர் மற்றும் எப்.எம். ரேடியோ தரப்பட்டுள்ளன. எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். வசதிகளும் உள்ளன. இதன் அதிக பட்ச விலை ரூ. 2,590 எனக் குறிக்கப்பட்டுள்ளது. LGA165
2. சாம்சங் இ 1172: இதுவும் ஒரு பார் டைப் போன். 72 கிராம் எடையில் 108.7 x 46.1 x 14.1 மிமீ என்ற அளவில் வடிவமைக்கப்பட்டது. ஒரு முறை சார்ஜ் செய்தால், 12 மணி நேரம் பேசலாம். இரண்டு அலைவரிசைகளில் இயங்குகிறது. 1.52 அங்குல அகலத்தில் திரை உள்ளது. போனின் மெமரி 1 எம்பி. இரண்டு சிம்களை இயக்கலாம். இதில் கேமரா இல்லை. எஸ்.எம்.எஸ். மட்டும் அனுப்பலாம். எம்பி3 பிளேயர் மற்றும் எப்.எம். ரேடியோ தரப்பட்டுள்ளன. இதனுடைய அதிக பட்ச விலை ரூ.1,250.
3. நோக்கியா சி5: அழகான மொபைல் ஒன்று வாங்க வேண்டும் எனத் திட்டமிடுபவர்களைக் கவர்ந்திழுக்கும் மொபைல் போனாக, நோக்கியா சி5 அமைந்துள்ளது. நோக்கியாவின் மொபைல் சர்வீஸ் மற்றும் பேஸ்புக் தொடர்புகளை இலவசமாகப் பெறும் வசதியுடன் தரப்பட்டிருப்பது இதன் இன்னொரு சிறப்பு. இதன் மெமரி 50 எம்பி. 16 ஜிபி வரை மெமரியை அதிகப்படுத்த முடியும். வெள்ளை மற்றும் லேசான கிரே நிறம் கலந்து, அம்சமாக இந்த போன் உள்ளது. சிம் ஒன்று மட்டுமே பயன்படுத்த முடியும். விஜிஏ வீடியோ அழைப்பு கேமரா ஒன்றும், வழக்கமான 3 எம்பி திறன் கொண்ட 2 எக்ஸ் ஸூம் வசதி கொண்ட கேமரா ஒன்றும் தரப்பட்டுள்ளன. 3ஜி வீடியோ அழைப்பு, வீடியோ பிளே பேக், வீடீயோ பதிவு ஆகியவற்றை மேற்கொள்ளலாம். எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., புஷ் மெயில், ஆகிய வசதிகள் கிடைக்கின்றன. எம்பி3 பிளேயர், ஆர்.டி.எஸ். இணைந்த ஸ்டீரீயோ எப்.எம். ரேடியோ, A2DP இணைந்த புளுடூத் கொண்ட இந்த மொபைல் போன் சிம்பியன் சிஸ்டத்தில் இயங்குகிறது.
இதன் அதிக பட்ச விலை ரூ.7,200

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக