வெள்ளி, 27 மே, 2011

தொலைக்கப்படும் மொபைல் போன்கள்

அசுர வேகத்தில் மொபைல் போன் பயன்பாடு நம்மிடையே அதிகரித்து வருகிறது. பெரும்பாலானவர்கள், இரண்டுக்கும் மேற்பட்ட போன்களில், மூன்றுக்கும் மேற்பட்ட சிம் கார்டு களைப் பயன்படுத்தி வருகின்றனர். நம்முடைய வாழ்க்கையே நம் மொபைல் போனைச் சுற்றித்தான் வருகிறது. நம்முடைய நண்பர்களுடன் சோஷியல் நெட்வொர்க் தளங்களில் உரையாடுவது, வங்கிக் கணக்குகளை நிர்வகிப்பது எனப் பல்வேறு தளங்களில் மொபைல் போன் கை கொடுக்கிறது.
இருப்பினும் நம் மொபைல் தொலைந்து போனால், நம்முடைய பெர்சனல் தகவல்களும் மற்றவர் களுக்குச் சென்று, அதனால் இழப்பு ஏற்படும் அபாயமும் இதில் உள்ளது. நார்டன் நிறுவனம், இந்தியாவில் இது குறித்த ஓர் ஆய்வினை மேற்கொண்டது. அதில் கண்டறிந்த சில தகவல்களை இங்கு பார்ப்போம்.
இந்தியாவில் மொபைல் பயன்படுத்து பவர்களில் 53% பேர் தங்கள் மொபைலைத் தொலைக் கின்றனர்; அல்லது திருடுபவர் களிடம் விட்டு விடுகின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் இவ்வாறு தொலைப் பவர்கள் எண்ணிக்கை ஒன்றரை மடங்கு அதிகரித்துள்ளது.
74% பேர் தங்கள் பெர்சனல் தகவல்களை இன்னொரு போன் வழி ரிமோட் வழியில் நீக்கும் சாப்ட்வேர் தொகுப்புகளைத் தங்கள் மொபைல் போன்களில் பதித்துள்ளனர். இந்த சேவைக்கென அதிகப் பணம் கொடுத்திருக்கின்றனர். ஆனால், பணத்திற்கேற்ற முழுமையான சேவையினை அவர்கள் பெறுவதில்லை.
42% பேர் தான், தங்கள் மொபைல் போன்களை பாஸ்வேர்ட் கொண்டு பாதுகாத்துள்ளனர். பெரும்பாலும் இவர்கள் ஸ்மார்ட் போன் பயன்படுத்து பவர்களாக உள்ளனர்; மற்றும் ஏற்கனவே மொபைல் போன்களைத் தொலைத் தவர்களாக உள்ளனர்.
போனை லாக் செய்திடவும், தகவல்களை அழிக்கவும் மற்றும் ரிமோட் நிலையில் போன் எங்குள்ளது என்று அறியவும் உதவுகின்ற சாப்ட்வேர் தொகுப்பினைப் பெற 80% தயாராக உள்ளனர். 60% பேர் தங்கள் மொபைல் போன் வழியே, வங்கிக் கணக்குகளை நிர்வகிக்கத் தயாராக உள்ளனர்.

1 கருத்து:

  1. மொபைல் உபயோகிப்பவர்களை விட மொபைல் திருடர்கள் அதிகமா ?வியப்பாக உள்ளது !

    பதிலளிநீக்கு