மொபைல் இன்டர்நெட் பயன்படுத்துபவர்களுக்கு, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. மாதம் ரூ.99 கட்டணமாகச் செலுத்தி, எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் தொடர்ந்து, மொபைல் போன் வழியாக இன்டர்நெட் பிரவுசிங்கை இதன் மூலம் மேற்கொள்ளலாம். இது போஸ்ட் பெய்ட் மற்றும் பிரீ பெய்ட் சந்தாதாரர் இருவருக்கும் கிடைக்கும். இதனால் எந்தவிதத் தயக்கமும் இன்றி சேட்டிங், சோஷியல் நெட்வொர்க் தள பிரவுசிங், மல்ட்டிமீடியா டவுண்லோட், இன்ஸ்டண்ட் மெசஞ்சர் ஆகிய அனைத்தையும் பயன்படுத்தலாம் என்று இந்த பிரிவின் அதிகாரி மஹேஷ் பிரசாத் அறிவித்துள்ளார்.
இந்த திட்டத்துடன் ரிலையன்ஸ் வேறு சில திட்டங்களையும், மொபைல் இன்டர்நெட் பயன்படுத்துபவர்களுக்குத் தந்துள்ளது. ஒரு நாள் பயன்படுத்த டே பாஸ் ரூ.5, வாரத்திற்கு ரூ.29, 15 நாட்களுக்கு ரூ.51 என்ற திட்டங்களும் உள்ளன. இந்த திட்டத்தின் மூலம் 24,000 நகரங்களிலும், ஆறு லட்சம் கிராமங்களிலும் உள்ள ரிலையன்ஸ் சந்தாதாரர்கள் பயனடைவார்கள்

very nice
பதிலளிநீக்கு