புதன், 1 ஜூன், 2011

ஜிமெயில் தரும் சூடான தகவல்கள்

ஏதேனும் பயனுள்ள புதுமையைப் புகுத்துவது, கூகுள் நிறுவனத்தின் வாடிக்கை என நாம் அனைவரும் அறிவோம். அண்மையில் தன் ஜிமெயில் பக்கத்தில், ஒரு புதுமையை, ஆரவாரம் இன்றி, கூகுள் தந்துள்ளது. இதனை வெப் கிளிப்கள் (Web Clips) என கூகுள் அழைக்கிறது.
ஜிமெயில் பக்கத்தில் வலது மேல்புறம் பார்க்கவும். அங்கு வலது, இடதாக இரு அம்புக் குறிகளைப் பார்க்கலாம். முதலில் இதனைப் பார்க்கையில் ஏதோ வழக்கமான கூகுள் விளம்பரத்திற்கான வழி காட்டி எனத்தான் நாம் எண்ணுவோம். இப்படி எண்ணியபடியே, நான் அதன் மீது கிளிக் செய்தபோது, ஆச்சரியப்படத் தக்க வகையில், பன்னாட்டளவிலான செய்திகள் ஸ்குரோலிங் முறையில் ஓடின. இவை ESPN.com, Wired.com, Dictionary.com போன்ற தளங்களிலிருந்து எடுக்கப்பட்ட வையாக உள்ளன. உணவு தயாரிக்கும் குறிப்புகளும் (recipes) இதில் கிடைக்கின்றன. செய்திகள், தினம் ஒரு சொல் மற்றும் விளையாட்டு செய்திகள் இதில் தரப்படுகின்றன. மிகவும் பயனுள்ளவையாக இவை உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக