புதன், 15 ஜூன், 2011

3G போனின் விலை குறைகிறது

மொபைல் போன் பயன்படுத்தும் இடங்களில், சேவை மையங்களில், கடைகளில் என எங்கு பார்த்தாலும், 3ஜி மந்திரம் ஒலிக்கத் தொடங்கிவிட்டது.  இந்த சேவை குறித்த முழுமையான தகவல்கள் இல்லாவிட்டாலும், போன் ஒன்றை வாங்கிடத் திட்டமிடுபவர்கள் ஏராளம். இவர்களுக்காகவே மொபைல் சந்தையில், 3ஜி சேவையை இயக்கக் கூடிய மொபைல் போன்களைப் பார்வையிட்டதில், ரூ.10,000 க்கும் குறைவான விலையில் உள்ள சில போன்களை இயக்கிப் பார்க்க முடிந்தது. அவை குறித்த தகவல்கள் இங்கு தரப்படுகின்றன.
1. ஸ்பைஸ் எம்.ஐ. 300: ஆண்ட்ராய்ட் சிஸ்டம் இயங்கும் 3ஜி மொபைல் போன்களில் விலை குறைந்த போனாக இது உள்ளது. சாதாரணப் பயன்பாட்டில் இருந்து சோஷியல் நெட் வொர்க்கிங் தளங்களுக்கான இணைப்பு வரை  பலவகையான இன்டர்பேஸ் உள்ள போனாக இது வடிவமைக்கப் பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் ஸ்டோரிலிருந்து நிறைய அப்ளிகேஷன் புரோகிராம் களைப் பதிந்து இதில் இயக்கலாம். மேலும் ஸ்பைஸ் நிறுவனமும் தன் பங்கிற்கு இபிபோ, ரயில்வே தகவல்கள், வாபீடியா, ஃபிளிக்கர் மற்றும் பல தளங்களுக்கான இணைப்புகளை உருவாக் கியுள்ளது. அடுத்தடுத்து வரும் ஆண்ட்ராய்ட் புதிய சிஸ்டம் பதிப்புகளுக்கான அப்டேட் வசதிகளும் தரப்படுகின்றன. 3.2 அங்குல திரை,எட்ஜ், ஜி.பி.ஆர்.எஸ்., வை–பி, ஏ–ஜிபிஎஸ். சப்போர்ட் இணைந்த  ஜி.பி.எஸ்., A2DP இணைந்த புளுடூத், யு.எஸ்.பி.2 இணைப்பு வசதி, 5 மெகா பிக்ஸெல் கேமரா, மைக்ரோ எஸ்.டி. கார்ட் போர்ட் என இதன் மற்ற அம்சங்களைக் குறிப்பிடலாம். இதன் அதிக பட்ச விலை ரூ. 9,900.
2. சாம்சங் மான்ட்டி: மொபைல் சந்தையில் வெகுநாட்களாக, மிகவும் பிரபலமாக உள்ள போன். ஜி.பி.எஸ். முதல் வை–பி வரை பல வகையான நெட்வொர்க்கிங் இணைப்புகள் தரப்பட் டுள்ளன. இதில் சாம்சங் நிறுவனத்தின் டச்விஸ் இடைமுகம் தரப்பட்டுள்ளது. 3 அங்குல திரை, 3ஜி, எட்ஜ், ஜி.பி.ஆர்.எஸ். வை–பி தொழில் நுட்பம், ஏ–ஜிபிஎஸ். சப்போர்ட் இணைந்த  ஜி.பி.எஸ்., A2DP இணைந்த புளுடூத், 3 மெகா பிக்ஸெல் கேமரா, பதிவு வசதியுடன் எப்.எம். ரேடியோ,  மைக்ரோ எஸ்.டி. கார்ட் போர்ட் ஆகிய வசதிகள் உள்ளன. இதன் அதிகபட்ச விலை ரூ. 8,150.
3. எல்.ஜி. குக்கி ப்ளஸ்: எல்.ஜி. நிறுவனத்தின் குக்கி வரிசை போன்கள் இன்னும் மக்களி டையே ஆர்வம் ஊட்டும் போன்களாக விற்பனை செய்யப்படுகின்றன. தொடுதிரை, ப்ளாஷ் இணைந்த பயனாளர் இடைமுகம், கையெழுத்தினை அறிந்து கொண்டு செயல்படும் தொழில் நுட்பம், குவெர்ட்டி கீ போர்டு, டாகுமெண்ட் வியூவர் எனப் பல சிறப்பம்சங்கள் கொண்ட இந்த போனில் 3 அங்குல திரை, 3ஜி, எட்ஜ், ஜி.பி.ஆர்.எஸ். தொழில் நுட்பம், A2DP  இணைந்த புளுடூத்,3 மெகா பிக்ஸெல் கேமரா, பதிவு வசதியுடன் எப்.எம். ரேடியோ,  மைக்ரோ எஸ்.டி. கார்ட் போர்ட் ஆகிய வசதிகளும் உள்ளன. இதன் அதிக பட்ச விலை ரூ. 7,800.
4. சோனி எரிக்சன் செடார்: பூமியைப் பசுமையாக வைத்துக் கொள்ள, சோனி நிறுவனம் பழைய டிஜிட்டல் சாதனங்களின் பொருட்களை, சுழற்சி முறையில் பயன்படுத்தி சில மொபைல்களைத் தயாரித்து வருகிறது. அவற்றை கிரீன் ஹார்ட் சீரிஸ் போன்கள் என அழைக்கிறது. அந்த வரிசையில் வந்த 3ஜி போன் செடார். டெஸ்க்டாப் மூலம் சோஷியல் நெட்வொர்க் கிங் தளங்களுக்கான இணைப்பு அதிகமாகத் தரப்பட்டுள்ளது. 2.2 அங்குல திரை,  3ஜி, எட்ஜ், ஜி.பி.ஆர்.எஸ். தொழில் நுட்பம், A2DP  இணைந்த புளுடூத், 2 எம்பி திறன் கொண்ட கேமரா, ஜியோ டேக்கிங் வசதி, எப்.எம். ரேடியோ, மைக்ரோ எஸ்.டி. கார்ட் சப்போர்ட், 3.5 மிமீ ஹேண்ட்ஸ் ஃப்ரீ சாக்கெட் ஆகியவை தரப்பட்டுள்ளன. இதன் அதிக பட்ச விலை ரூ. 5,600.
5.நோக்கியா சி 5: அட்டகாசமான தோற்றம் தரும் வகையில் வடிவமைக்கப்பட்ட நோக்கியா போன்.  இதனுடைய பெரிய அளவிலான கீ பேட், டைப் செய்வதனை மிக மிக எளிதாக்குகிறது. இதன் ப்ராசசர் 600 எம்.எச்.இஸட் திறன் கொண்டதால், மிக வேகமாக அப்ளிகேஷன்கள் இயங்குகின்றன. சிம்பியன் எஸ் 60 சிஸ்டம் இதற்குக் கை கொடுக்கிறது. சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்களுக் கான நேரடி இணைப்பு, ஓவி மேப்பினை ஜி.பி.எஸ். வசதியுடன் என்றும் இலவசமாய் இதில் பெறலாம். வேர்ட், எக்ஸெல், பவர்பாய்ண்ட் மற்றும் பி.டி.எப். பைல்களைப் பார்க்க, டாகுமெண்ட் வியூவர் பதிந்து தரப்படுகிறது. 2.2 அங்குல திரை,  3ஜி, எட்ஜ், ஜி.பி.ஆர்.எஸ். தொழில் நுட்பம், ஏ–ஜிபிஎஸ். சப்போர்ட் இணைந்த  ஜி.பி.எஸ்., A2DP இணைந்த புளுடூத், A2DP இணைந்த புளுடூத், ஓவி மேப்ஸ், 3 எம்பி திறன் கொண்ட கேமரா, எல்.இ.டி. ப்ளாஷ், எப்.எம். ரேடியோ, மைக்ரோ எஸ்.டி. கார்ட் சப்போர்ட், 3.5 மிமீ ஹேண்ட்ஸ் ஃப்ரீ சாக்கெட் ஆகியவை தரப்பட்டுள்ளன. இதன் அதிக பட்ச விலை ரூ. 8,000.

2 கருத்துகள்:

  1. பயனுள்ள பதிவு நன்றி,

    பதிலளிநீக்கு
  2. அப்டெட் நியூஸ்தான்..சாம்சங் ஹீரோ போன்ற 3ஜி ஃபோன் தகவல் தேடி வந்தேன்

    பதிலளிநீக்கு