சாம்சங் கேலக்ஸி எஸ் 2 தனக்கென ஒரு சிறந்த பெயரை எடுத்துக் கொண்டதுடன், மற்ற போன்களின் விலைக் குறைப்பிற்கும் அடிப்படையாக உள்ளது. சாம்சங் நிறுவனம் சற்று முன்னர் வெளியிட்ட சாம்சங் எஸ். ஆண்ட்ராய்ட் போன் ரூ.25,000 லிருந்து ரூ.22,000 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனத்திற்காக சாம்சங் தயாரித்து அளித்த நெக்ஸஸ் எஸ், ரூ.26 ஆயிரத்திலிருந்து ரூ.22 ஆயிரமாகக் குறைக்கப்பட்டுள்ளது. காலக்ஸி எஸ் போலவே, நெக்ஸஸ் எஸ் மொபைல் போனும் 4 அங்குல வண்ணத்திரை, ஆண்ட்ராய்ட் 2.3.4 சிஸ்டம், ஒரு கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஹம்மிங் பேர்ட் சி.பி.யு., 512 எம்பி நினைவகம், 16 ஜிபி உள் இணைந்த நினைவகம் மற்றும் 5 எம்.பி.திறனுடன் கேமரா எனப் பல சிறப்பம்சங்கள் உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக