புதன், 15 பிப்ரவரி, 2012

explorer shotcut keys

பல வாசகர்கள், இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கான ஷார்ட்கட் கீகள் என தனியே உள்ளவற்றைப் பட்டியல் செய்து தரக் கேட் டுள்ளனர். அவர்களின் விருப்பத்திற்கிணங்க, இங்கே அடிக்கடி பயன்படுத்தக்கூடிய சில ஷார்ட்கட் கீ தொகுப்புகள் தரப்படுகின்றன. பல ஏற்கனவே பழக்கமான பொதுவானவை. சில இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கு மட்டுமே பயன்படக் கூடியவை.
F1 – உதவி பெற
F3 – சர்ச் பேனல் இயக்கவும் மூடவும்
F4 – அட்ரஸ் பார் கீழ் விரிக்க 
F5 – அப்போது பார்த்துக் கொண்டிருக்கும் இணையப் பக்கத்தினை ரெப்ரெஷ் செய்திட; மீண்டும் புதியதாய் இறக்கம் செய்திட. 
F6 அட்ரஸ் பாருக்கு போகஸ் செய்திட 
F11 – முழுத் திரைப் பயன்பாட்டினை இயக்கவும், நிறுத்தவும். 
Alt + (Left Arrow) – ஹிஸ்டரியில் பின்னோக்கி செல்ல; பேக் ஸ்பேஸ் கீ செயல்பாடுதான் இது
Alt + (Right Arrow)– ஹிஸ்டரியில் முன்னோக்கி செல்ல
Ctrl + A – அனைத்தையும் தேர்ந்தெடுக்க 
Ctrl + C – தேர்ந்தெடுத்ததனை காப்பி செய்திட 
Ctrl + E – தேடலுக்கான பேனல் கிடைக்கும்
Ctrl + F – இணையப் பக்கத்தில் தேடலுக் கான செயல்பாடு 
Ctrl + H – ஹிஸ்டரி பேனல் இயக்கவும் மூடவும் 
Ctrl + I – பேவரிட்ஸ் பேனல் மூடவும் இயக்கவும் 
Ctrl + L – ஒரு பைலைத் திறக்க 
Ctrl + N – புதிய பிரவுசர் விண்டோ ஒன்றைத் திறக்க 
Ctrl + P – பார்த்துக் கொண்டிருக்கும் இணையப் பக்கத்தினை அச்சில் எடுக்க 
Ctrl + R– எப்5 கீ அழுத்திக் கிடைக்கும் ரெப்ரெஷ் பயன்பாடு 
Esc – ஓர் இணையப் பக்கம் கம்ப்யூட்டரில் கிடைத்துக் கொண்டி ருக்கையில், அந்த செயல்பாட்டினை நிறுத்த 
Ctrl + D – அப்போது பார்த்துக் கொண்டிருக்கும் இணையப் பக்கத்தினை பேவரிட்ஸ் தளப் பட்டியலில் சேர்த்திட 
Doubleclick (on a word) – ஒரு சொல்லில் டபுள் கிளிக் செய்தால், அந்த சொல் தேர்ந்தெடுக்கப்படும்
Tripleclick (on a word) – ஒரு வரி முழுவதும் தேர்ந்தெடுக்க 
Wheel click – மெதுவாக பக்கம் ஸ்குரோல் முறையில் இயங்கிட 
Hold Ctrl + Scroll Wheel forward – இணையப் பக்க டெக்ஸ்ட்டின் எழுத்தின் அளவை அதிகரிக்க 
Hold Ctrl + Scroll Wheel backward – இணையப் பக்க டெக்ஸ்ட்டின் எழுத்தின் அளவைக் குறைக்க 
Click one point then hold down Shift and then click another – தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு இடங்கள் நடுவே உள்ளனவற்றைத் தேர்ந்தெடுக்க 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக