பீடெல் டெலிடெக் நிறுவனம் ஜி.டி. 470 என்ற பெயரில், குறைவான விலையில் டச் ஸ்கிரீன் மொபைல் போன் ஒன்றை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. இரண்டு சிம்களை இயக்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த மொபைல் போனில், 2.8 அங்குல அகலத்திலான தொடு திரை தரப்பட்டுள்ளது. இந்த திரை 240x320 பிக்ஸெல்கள் கொண்டதாக உள்ளது. இதன் முனைகள் அழகான வளைவுகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. இதன் எடை 93 கிராம். 1.3 மெகா பிக்ஸெல் கேமரா, எப்.எம். ரேடியோ, மெமரி கார்ட் மூலம் 8 ஜிபி வரை மெமரி அமைத்துக் கொள்ளும் வசதி, புளுடூத், பலவகை வீடியோ பார்மட்களின் இயக்கம், மியூசிக் பிளேயர் ஆகியவை இதன் சிறப்பு அம்சங்களாகும். இந்திய பண்டிகைகளைக் காட்டும் வசதியுடன் கூடிய காலண்டர் இயங்குகிறது. 1000 mAh திறன் கொண்ட பேட்டரி தொடர்ந்து 4 மணி நேரம் பேச மின்சக்தி அளிக்கிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால், 200 மணி நேரம் மின்சக்தியைத் தேக்கி வைக்கிறது. இதன் அதிக பட்ச விலை ரூ. 3,300 எனக் குறிப்பிட்டி ருந்தாலும், சந்தையில் இந்த மொபைல் ரூ.2,850க்குக் கிடைக்கிறது. தொடு திரையுடன் கூடிய விலை குறைந்த போனாக இது கருதப்படுகிறது.
பதிவை படித்தேன் நல்ல வெளியீடு.ஆனால் இது போல் வரும் குறைந்த டச் உள்ள போனல்லாம் அதிக சிறப்பு உள்ளதாக தோன்ற வில்லை.டச் போனுக்குரிய சிறப்பை மங்குவதற்கு வழி காட்டியாகவே இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.
பதிலளிநீக்குஅ.ஆரிப்.
malaithural.blogspot.com