புதிதாக கார் வாங்கியவர்கள் தங்கள் கார்களுக்கு ஏதேனும் கூடுதல் சாதனங்களை வாங்கிப் பொருத்திக் கொண்டே இருப்பார்கள். சந்தையில் விற்பதில் எதனை வாங்குவது, எதனை விடுவது என்று தெரியாமல் இருப்பார்கள். பயன்பாட்டின் அடிப்படையில் வாங்காமல், அடுத்தவரிடம் உள்ளது, அழகாக இருக்கிறது, விலை மலிவு எனப் பல சாதனங்களை வாங்கிக் குவிப்பார்கள்.
இதே போல் தான் பயர்பாக்ஸ் பிரவுசருக் கான எக்ஸ்டென்ஷன் புரோகிராம்கள். பயர்பாக்ஸ் ஒரு ஓப்பன் சோர்ஸ் பிரவுசர் என்பதால், பலரும் அதன் இயக்க வடிவமைப்பு குறியீடுகளைப் பெற்று, கூடுதல் பயன்பாட்டிற்கென ஆயிரக்கணக் கில் எக்ஸ்டென்ஷன் புரோகிராம்களைத் தந்துள்ளனர். இவை அனைத்தும் இணையத்தில் இலவசமாகவே கிடைப் பதால், பலரும் இவற்றை டவுண்லோட் செய்கின்றனர்; இன்ஸ்டால் செய்கின்றனர். ஆனால் முழுமையாகப் பயன்படுத்து கிறார்களா, என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். இதற்குக் காரணம் கிடைக்கும் எக்ஸ்டென்ஷன் புரோகிராம் களில் நமக்கு அவசியமாய்த் தேவைப்படுபவை எவை என்று பலரும் அறிந்து கொள்ளாமல் இருப்பதுதான். இங்கு பயர்பாக்ஸ் பிரவுசர் பயன்படுத்துபவர்கள் கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களைப் பற்றி விளக்கக் குறிப்புகளைப் பார்க்கலாம். இவற்றைத் தேர்ந்தெடுக்கையில், செயலாற்றத்தில் விரைவு, செயல் திறன் அதிகரித்து நேரத்தைக் குறைத்திடும் வசதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொள்ளப்பட்டது.
1.எவர்நோட் (Evernote): இன்டர்நெட்டில் தளங்களில் உலா வருகையில், இதன் மீது ஒரு சிறிய குறிப்பினை எழுதி வைத்து, பின்னர் நேரம் கிடைக்கும்போது பார்த்துக் கொள்ளலாமே என்ற எண்ணம் வரும். எப்படி தளங்களில் உள்ள இணையப் பக்கங்களில் எழுதி வைப்பது? அப்படியே எழுதி வைத்தாலும், மீண்டும் அதனைப் பார்க்கையில், அப்படியே இருக்குமா? என்ற சந்தேகமும் கேள்விக் குறியும் வரலாம். அப்படி ஒரு வசதியைத் தான் Evernote என்னும் எக்ஸ்டன்ஷன் தருகிறது. எந்த ஓர் இணைய தளத்திலும் இதனைப் பயன்படுத்தி குறிப்புகளை எழுதி வைக்கலாம். மீண்டும் அந்த இணைய தளத்தினைப் பார்க்கையில், அக்குறிப்புகள் அங்கேயே இருக்கும். தளங்களை மொபைல் போன் வழியாகப் பார்வையிட்டாலும் அவை கிடைக்கும். தள முகவரி https://addons.mozilla.org/enUS/firefox/addon/evernotewebclipper
2. கிரீஸ் மங்க்கி (Greasemonkey): இந்த எக்ஸ்டென்ஷனைப் பயன்படுத்தி, இணையத் தேடலுக்கு வசதி தரும் குறியீடுகளை எழுதிக்கொள்ளலாம். தேடல் மட்டுமின்றி, மேலும் பல வசதிகளை உருவாக்கவும் இதனைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, டூல்பாரில் மியூசிக் கட்டுப்படுத்தும் பட்டன்களை உருவாக்கலாம். ஒருமுறை இதனை டவுண்லோட் செய்தவுடன், அதிகமான எண்ணிக்கையில் ஸ்கிரிப்ட் கள் கிடைக்கின்றன. எடுத்துக்காட்டாக, ஜிமெயில் ஸ்டார்ட்டர் ஸ்கிரிப்ட் (Gmail Starter Script) என்னும் ஸ்கிரிப்ட், ஜிமெயில் தளத்தினை, ஒரு பெட்டிக்குள் வைத்துப் பார்க்காமல், திரை முழுவதும் பார்க்க வசதி செய்து தருகிறது. தள முகவரி: https://addons.mozilla.org/enUS/firefox/search/?q=Greasemonkey&cat=all&x=8&y =17
3.எக்ஸ்மார்க்ஸ் (Xmarks): டெஸ்க்டாப், ஐபோன், லேப்டாப், டேப்ளட் பி.சி. என அனைத்துவகை சாதனங்களிலும் இன்டர் நெட் உலா வருகிறீர்களா! அப்படியானால், நீங்கள் குறித்து வைத்த தளங்களின் புக்மார்க்குகளை, எப்படி அனைத்து கம்ப்யூட்டர்களிலும் எளிதாகப் பெற முடியும்? இந்த வகையில் உங்களுக்கு உதவுவதுதான் இந்த எக்ஸ்மார்க்ஸ் எக்ஸ்டென்ஷன். புக்மார்க் மட்டுமின்றி உங்கள் பாஸ்வேர்ட் களையும் அனைத்திற்குமாக ஒருங்கிணைத்துத் தரும் வேலையினை இந்த எக்ஸ்டன்ஷன் புரோகிராம் மேற்கொள்கிறது. வெவ்வேறு பிரவுசர்களுக்கிடையேயும் இவற்றை இணைத்து, ஒருங்கிணைத்துத் தரும். தள முகவரி: https://addons.mozilla.org/enUS/firefox/ addon/xmarkssync/
4. ஸ்பீட் டயல் (Speed Dial): நீங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள், குறிப்பிட்ட சில தளங்களைக் கட்டாயம் தினந்தோறும் பார்த்து பயன்படுத்துபவர்களா? அப்படியானால், அந்த தளங்களை, சொடுக்குப் போட்ட நேரத்தில் உங்களுக்குத் தருவது ஸ்பீட் டயல் எக்ஸ்டன்ஷன். இந்த எக்ஸ்டன்ஷன் அந்த தளங்களை எல்லாம் ஒரு டேப்பில் அமைத்துத் தருகிறது. சிறிய படங்களாக அவற்றின் முகப்பு தோற்றத்தினையும் காட்டுகிறது. இவை அவ்வப்போது ரெப்ரெஷ் செய்யப்படுவதும் இதன் சிறப்பு. தள முகவரி: https://addons.mozilla.org/enUS/firefox/search/?q= Speed+Dial&cat=all&x=25&y=10
5. ரீட் இட் லேட்டர் (Read It Later): விரைவாக உங்கள் விமானம் அல்லது ட்ரெயினில் ஏறிப் பயணம் செய்திடப் புறப்படுகிறீர்கள். அப்போது பார்க்கும் இணையத்தில் உள்ள கட்டுரை மற்றும் தளம் உங்களுக்கு சேவ்செய்யப்பட்டு பின்னர் படிக்கக் கிடைக்க வேண்டும் என்று எண்ணு கிறீர்களா? அங்கே உங்களுக்கு இந்த ரீட் இட் லேட்டர் என்ற எக்ஸ்டன்ஷன் உதவும். ஒரே ஒரு கிளிக்கில், பெரிய கட்டுரையாக இருந்தாலும், நீளமான தளமாக இருந்தாலும் அவற்றை, இந்த எக்ஸ்டன்ஷன் காப்பி செய்து பின்னர் படிக்கத்தருகிறது. தள முகவரி: https://addons.mozilla.org/enUS/firefox/search/ ?q=Read+It+Later&cat=all&x=20&y=14
6. ஈஸி யு-ட்யூப் வீடியோ டவுண்லோடர் (Easy You Tube Video Downloader): வேகமாக இயங்கும் இன்டர்நெட் இணைப்பு இல்லை என்றால், யு-ட்யூப் வீடியோ தொடர்ந்து ஸ்ட்ரீம் ஆகாது. எனவே யு-ட்யூப் போன்ற வீடியோ தளங்கள் நம் எதிர்பார்ப்பு களுக்கேற்ப கிடைக்காது. இப்படிப்பட்ட நேரங்களில் நமக்கு உதவிக்கு வருவது இந்த ஈஸி யுட்யூப் வீடியோ டவுண்லோடர். யுட்யூப் தளத்திலிருந்து ப்ளாஷ் படங்களை உடனடியாக டவுண்லோட் செய்து, பின்னர் இன்டர்நெட் இணைப்பு இல்லாமலேயே பார்க்க உதவி செய்கிறது. தள முகவரி: https://addons.mozilla.org/enUS/firefox/search/?q =Easy+You+Tube+ Video+Downloader&cat= all&x=16&y=20
7. ஆசம் ஸ்கிரீன் ஷாட் (Awesome Screenshot): ஓர் இணைய தளம் முழுவதுமாக ஸ்கிரீன் ஷாட் எடுக்க வேண்டுமா? ஆசம் ஸ்கிரீன் ஷாட் எக்ஸ்டன்ஷனைப் பயன்படுத்தலாம். திரையில் தெரிவது மட்டுமின்றி, அப்போது காட்டப்படாத பக்கம் முழுவதும் சேவ் செய்து இந்த எக்ஸ்டன்ஷன் தரும். இதனை எப்போது வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம். அந்த தளங்களின் மீது குறிப்புகளை எழுதி வைத்துக் கொண்டு பின்னர் பயன்படுத்தலாம். தள முகவரி: https://addons.mozilla.org/enUS/firefox/ search/?q=Awesome+Screenshot&cat=all&x =2 3&y=10
8. அட் பிளாக் ப்ளஸ் (Ad Block Plus): பயர்பாக்ஸ் எக்ஸ்டன்ஷன் புரோகிராம் களில் இது மிகவும் பிரபலமான ஒன்று. திடீரென எழுந்தும், ஊர்ந்து வந்தும், விரிந்து வந்தும் நம் இணைய பயணத்தில் எரிச்சல் ஊட்டும் விளம்பரங்களை இந்த எக்ஸ்டன்ஷன் தடுக்கிறது. இதனை இறக்கிப் பதிந்து, இன்ஸ்டால் செய்து பயன்படுத்துவது மிக எளிது. தள முகவரி: https://addons.mozilla.org/enUS/firefox/ search/?q=Ad+Blok +Plus&cat=al l&x=23&y=17
மேலே சொல்லப்பட்ட எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள் மட்டுமின்றி, மேலும் சிலவும் நமக்கு பயன்தருவதாக இருக்கலாம். இருப்பினும் பொதுவாக, பெரும்பாலோர் விரும்பும் வசதிகளின் அடிப்படையில் இவை தரப்பட்டுள்ளன. பயர்பாக்ஸ் எக்ஸ்டன்ஷன் தளத்தில் (https://addons.mozilla. org/enUS/firefox) இவற்றைப் பெறலாம். இந்த தளம் சென்று, அதில் காட்டப்படும் தேடல் கட்டத்தில், தேவையானதை டைப் செய்து, பின்னர் கிடைக்கும் மெனுவில் இருந்து தேர்ந்தெடுத்து, பின்னர் அந்த தளம் சென்று டவுண்லோட் செய்து கொள்ளலாம்.

பயனுள்ள தகவல்கள்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
thanks for sharing... vaalththukkal
பதிலளிநீக்கு