இந்த பிரவுசர் வெளியான போது, மைக்ரோசாப்ட் இந்தியாவில் பிரபலமான 29 இணைய தளங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 ஐ பிரபலப்படுத்த இந்த ஒப்பந்தம் வழி வகுக்கிறது. 1990 முதல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு, இந்தியாவில் செயல்பட்டு வருகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
தமிழ் மற்றும் பிற மொழிகளில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரை உங்கள் கம்ப்யூட்டரில் இயக்க, http://windows.microsoft.com/enUS/internetexplorer/downloads/ie9/worldwidelanguages என்ற முகவரி சென்று அங்கிருந்து இலவசமாக டவுண்லோட் செய்து கொள்ளலாம். உங்கள் கம்ப்யூட்டரில் இயங்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் (விஸ்டா/விண்டோஸ் 7 x 32 / 64 பிட்) எது என அறிந்து அதற்கேற்ற பதிப்பினை டவுண்லோட் செய்திடவும். விண்டோஸ் எக்ஸ்பியில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 இயங்காது என்பது உங்களுக்கு ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக